கூகிள் தேடல்; முதல் இடத்தில் ‘ஜெய்பீம்’

கூகுள் தேடலில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது. நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஜெய்பீம் திரைப்படத்தில்…

கூகுள் தேடலில் ‘ஜெய்பீம்’ திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளது.

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி, ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் ‘ஜெய்பீம்’. இந்தப் படத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றது. ஜெய்பீம் திரைப்படத்தில் குறிப்பிட்ட சமுதாயத்தினை தவறாக சித்தரிக்கும் வகையில் உள்நோக்கத்துடன் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக சிலரால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கூகுள் இந்தியா தனது ‘year in Search’ அதாவது ஆண்டு தேடுதல் முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த முடிவுகளில் அதிகம் தேடப்பட்ட படங்கள் பட்டியலில் சூர்யா நடித்த ஜெய்பீம் திரைப்படம் முதல் இடத்தை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இதுபோல, அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா முதல் இடத்தையும், நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர்.

இதேபோல, பெருந்தொற்று பரவல் காரணமாக கோவிட்-19 தடுப்பூசிகள் பற்றிய தேடல்கள் அதிக டிரெண்டிங்கில் இருந்திருக்கிறது. தடுப்பூசிகளின் இருப்பு, தடுப்பூசிகளைத் தேர்வு செய்தல் என்று பல வகையான தகவல்களை COWIN, Covid Vaccine என்று மக்கள் தேடியுள்ளனர். ‘Near me’ Covid Vaccine, Covid tests, Covid hospital உள்ளிட்டவை டாப் தேடல்களாக இருந்திருக்கிறது.

அதே போன்று oxygen cylinders and CT scans போன்றவையும் பெருந்தொற்றின் பிரதிபலிப்பால் அதிகமாக தேடப்பட்டிருக்கிறது. இதனுடன் உணவு டெலிவரி, உணவு பார்சல் வசதியுடைய ரெஸ்டாரண்ட் போன்றவையும் கூட பொதுமுடக்க காலத்தில் தேடப்பட்டிருக்கிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.