முக்கியச் செய்திகள் வணிகம்

கூகுள் பேவில் இனி ஃபிக்ஸட் டெபாசிட் செய்யலாம்

கூகுள் பே செயலி மூலம் சுலபமாக ஃபிக்ஸட் டெபாசிட் கணக்கு தொடங்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

டிஜிட்டல் முறையில் பணம் அனுப்புவது, நிதி சார்ந்த தேவைகளுக்கு கூகுள் பே ஆப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், கூகுள் பே செயலி மூலம் ஃபிக்ஸட் டெபாசிட் சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்காக ஈக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கியுடன் கூகுள் ஒப்பந்தம் செய்துள்ளது.

பொதுவாக ஃபிக்ஸட் டெபாசிட் முதலீடு செய்ய வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும். ஆனால், கூகுள் பே மூலம், வங்கிக் கணக்கு இல்லாமலேயே வைப்பு நிதியில் முதலீடு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்துக்கு, 6.35 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுவதாக, எக்விட்டாஸ் ஸ்மால் பைனான்ஸ் வங்கி தெரிவித்துள்ளது.

இச்சேவையை பயன்படுத்த விரும்புவோர், முதலில் கூகுள் பே செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும், எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வாடிக்கையாளர்கள் தங்களின் டெபாசிட் தொடர்பான விவரங்களை, கூகுள் பே செயலியிலேயே ட்ராக் செய்யும் வசதியும் இணைக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

கேஜிஎப்-2 ரிலீஸ் தேதி அறிவிப்பு

Halley karthi

எனக்கும் இந்தி தெரியாது: உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து. 

Ezhilarasan

அவதூறு வழக்குகளில் முதலமைச்சர் நேரில் ஆஜராக நிர்ப்பந்திக்கக் கூடாது: உயர் நீதிமன்றம்

Ezhilarasan