பானி பூரியை டூடுலில் வைத்து கொண்டாடும் கூகுள்!

இந்தியாவின் பிரபல சிற்றுண்டியான பானிபூரியை கூகுள் நிறுவனம் டூடுலில் வைத்து இன்று கொண்டாடுகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் சுவையான சிற்றுண்டியான  பானிபூரியை மக்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில் பானி பூரி பலரின்…

இந்தியாவின் பிரபல சிற்றுண்டியான பானிபூரியை கூகுள் நிறுவனம் டூடுலில் வைத்து இன்று கொண்டாடுகிறது.

இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் சுவையான சிற்றுண்டியான  பானிபூரியை மக்கள் விரும்புகிறார்கள். அந்த வகையில் பானி பூரி பலரின் விருப்பமான  தெரு உணவு. பானி பூரியின் பூர்வீகம் வடஇந்தியா. தற்போது தெருவோரக் கடைகளில்  அதிகம் விற்பனை செய்யப்படுவது பானி பூரிதான்.

மகாபாரதத்தின் போது பானி பூரி முதன்முதலில் திரௌபதியால்  கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. திரௌபதி பாண்டவர்களின் மனைவியாக  ஆன போது, போர்வீரர்கள் குறைந்த வளங்களுடன் வனவாசம் வாழ்ந்து கொண்டிருந்ததாக  கதை சொல்கிறது. திரௌபதியின் மாமியார் குந்தி, ஐந்து ஆண்களின் பசியைப் போக்க  எஞ்சியிருந்த ஆலு சப்ஜி மற்றும் கோதுமை மாவை ஏதாவது ஒன்றைச் செய்யச்  சொன்னதாகவும், அதன் விளைவாக திரௌபதி செய்த உணவு பாண்டவர்களின் பசியைப்  போக்க உதவும் ஒரு கடி அளவு சிற்றுண்டியே பானி பூரி என கூறப்படுகிறது.

இந்நிலையில் அனைவருக்கும் பிடித்த உணவான பானிபூரியை இன்று கூகுள் நிறுவனம்  டூடுலில் வைத்து கொண்டாடுகிறது. வாடிக்கையாளர்கள் சுவைக்கு ஏற்றவாறு பல்வேறு  வகையான பானி பூரியை தேர்வு செய்ய கூகுள் உதவுகிறது. மேலும் பல்வேறு கேம்ஸ்களையும் கூகுள் அறிமுகப்படுத்தியுள்ளது.  இது பானிபூரி  கடைக்காரர்களின் விற்பனைக்கு பெரிதும் உதவும் வகையில் அமைந்துள்ளது.

2015-ம் ஆண்டு இதே நாளில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் உள்ள ஒரு உணவகம் தனது வாடிக்கையாளர்களுக்கு 51 தனித்துவமான பானி பூரி சுவைகளை  வழங்கியதற்காக கோல்டன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்தது  குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.