#GoodByeUSA – அமெரிக்காவில் இருந்து நாளை தாயகம் திரும்புகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தொழில்முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோ,…

#GoodByeUSA - Chief Minister M.K.Stalin is coming home from America tomorrow!

தொழில்முதலீடுகளை ஈர்க்க அமெரிக்க சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சென்னை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். இதனைத் தொடர்ந்து சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ போன்ற போன்ற முக்கிய நகர்களுக்கு சென்று அங்குள்ள உலகின் முன்னணி நிறுவனங்களை சார்ந்த தலைமைச் செயல் அதிகாரிகளை சந்தித்தார்.

இதேபோல மைக்ரோசாப்ட் , கூகுள் மற்றும் போன்ற நிறுவனங்களின் தலைமை அலுவலகங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றார். இதன் ஒருபகுதியாக கூகுள் நிறுவனத்தோடு புரிந்துணர்வு கையெழுத்தானது. இதேபோல 18 முக்கிய நிறுவனங்களுடன் தொழில்புரிவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.

இதன்மூலம் கிட்டத்தட்ட 7616 கோடி ரூபாய் முதலீட்டில் தொழில்கள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேபோல அங்குள்ள அயலக தமிழர்களை சந்தித்தார். அவர்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை உற்சாகமாக வரவேற்றனர். இதேபோல சிகாகோ தமிழ் கூட்டமைப்பு மற்றும் சிகாகோ தமிழ்ச் சங்கங்களின் சார்பில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.

இந்த நிலையில் ஆகஸ்ட் 27 ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாள் பயணத்தை முடித்துக் கொண்டு நாளை தமிழ்நாடு திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. இன்று சிகாகோவில் இருந்து புறப்படும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காலை 8.30 மணி அளவில் சென்னை விமான நிலையம் வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.