வாஸ்ட்அப் பயன்படுத்துபவர்களுக்கு நல்ல செய்தி!!!

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் இனிமேல் 2GB வரையிலான பைல்களை வாட்ஸ்அப் மூலம் பகிர முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.  வாட்ஸ்அப் சமீபத்தில் பைல்களை பரிமாற்ற வரம்பை 100எம்பியில் இருந்து 2ஜிபியாக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப் பயனர்கள்…

வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்கள் இனிமேல் 2GB வரையிலான பைல்களை வாட்ஸ்அப் மூலம் பகிர முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 

வாட்ஸ்அப் சமீபத்தில் பைல்களை பரிமாற்ற வரம்பை 100எம்பியில் இருந்து 2ஜிபியாக உயர்த்தியுள்ளது. இதன்மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தனிப்பட்ட அல்லது குழுக்களில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் பிற பைல்களை பகிரலாம்.
ஜிமெயிலில் அதிகபட்சமாக 25MB அளவுள்ள புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய எந்த வகையான பைல்களையும் பயனாளிகள் பகிர முடியும். மின்னஞ்சல் சேவையானது கூகுள் இயக்ககம் வழியாகப் பெரிய பைல்களை பகிர முடியும்.

இதேபோல் மைக்ரோசாஃப்ட் அவுட்லுக் மின்னஞ்சல் சேவையை பயன்படுத்தும் பயனர்கள் 20MB அல்லது அதற்கும் குறைவான அளவு  பைல்களை மட்டுமே இணைத்து அனுப்ப முடியும். ஜிமெயிலைப் போலவே, அவுட்லுக்கும் பைல்களை ஒன் டிரைவ் இணைப்புகளாகப் பகிரும் Optionஐ வழங்குகிறது.

வாட்ஸ்அப் போன்று டெலிகிராம் செயலியிலும் 2 GB வரையிலான பைல்களை பகிர முடியும். டெலிகிராம் பயனாளிகள் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் போன்றவற்றை தனிப்பட்ட chat அல்லது குழுக்களில் பகிர அனுமதிக்கிறது.

இன்ஸ்டாகிராம் பயனர்கள் புகைப்படங்களையும் வீடியோக்களையும் நேரடி செய்திகள் வழியாக மட்டுமே பகிர முடியும். இதில் 650MB அளவுள்ள வரை பதிவேற்றம் செய்ய முடியும்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.