சாக்லேட் ரசிகர்களுக்கு நற்செய்தி : இணையத்தை கலக்கும் சாக்லேட் தோசை

தோசைகளில் பல் வெரைட்டிகள் இருக்க புது வகையான சாக்லேட் தோசை சுடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சிற்றுண்டி உணவுகளில் முக்கியமாக இடம்பெறும் உணவு வகை இட்லி மற்றும் தோசையாகும். இட்லிக்களில்…

தோசைகளில் பல் வெரைட்டிகள் இருக்க புது வகையான சாக்லேட் தோசை சுடும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

தென்னிந்திய சிற்றுண்டி உணவுகளில் முக்கியமாக இடம்பெறும் உணவு வகை இட்லி மற்றும் தோசையாகும். இட்லிக்களில் பல வெரைட்டிகள் இருப்பது போல் தோசைகளிலும் நூறுக்கும் மேற்பட்ட வெரைட்டிகள் உள்ளன. சாதரண தோசை முதல் மதுரை ஸ்பெஷல் கறி தோசை வரை தமிழகம் முழுக்க மாவட்டத்திற்கு மாவட்டம் தோசை வகைகள் மாறுபடுகின்றன.

தமிழ்நாட்டைப் போலவே கர்நாடகத்திலும் எக்கச்சக்கமான தோசை வெரைட்டிகள் உள்ளன. மைசூர் மசாலா தோசையும் பருப்பு சட்னியும் அல்டிமேட் காம்போ எனும் சொல்லும் அளவிற்கு மிகவும் ருசியாக இருக்கும். இதை போல ரவா தோசை, காளான் தோசை, நல்லி தோசை என 100க்கும் மேற்பட்ட வெரைட்டிகள் தோசைகள் உள்ளன.

தற்போது சாக்லேட் தோசை இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் ஒரு சமையற் கலைஞர் தோசை மாவை ஊற்றி அதன் மேல் சாக்லேட்டை ஊற்றுகிறார். அதனுடன் கிட்கட் சாக்லேட் போட்டு தோசையை ரோஸ்ட்டாக எடுத்து கொஞ்சமாக சீஸ் தூவல் மற்றும் சாக்லேட் சிரப் ஆகியவற்றை தூவி பரிமாறுகிறார்.

சாக்லேட் ரசிகர்களுக்கு இந்த சாக்லேட் சீஸ் தோசை ஒரு புதிய அறிமுகமகாம இருக்கும். இந்த வீடியோ வைரலான நிலையில் இந்த தோசைக்கு கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.