கர்நாடகாவில் காங்கிரஸ் 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் – ராகுல் காந்தி

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி  150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.…

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி  150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

224 தொகுதிகள் கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு வரும் மே மாதம் 10-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் கர்நாடகாவில் தீவிரமாகத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆளும் பாஜகவுக்கும் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கும் தேர்தல் களத்தில் கடும் போட்டி நிலவுகிறது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், அரசுப் பேருந்துகளில் பெண்கள் இலவசமாகப் பயணம் செய்யலாம் என ராகுல் காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்திருந்தார்.

இதே போல காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் வாக்குறுதிகளில் ” அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப தலைவிகளுக்கு ரூ.2,000 மாதாந்திர உதவி, வறுமைக் கோட்டுக்குக்கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி ,  18 முதல் 25 வயது வரை உள்ள பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கர்நாடக மாநிலம் கல்புர்கியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட  ராகுல் காந்தி பேசியதாவது:

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதை யாராலும் தடுக்க முடியாது. பாஜகவிற்கு மக்கள் 40 இடங்களை மட்டுமே வழங்குவார்கள். காங்கிரஸ் கட்சி குறைந்தபட்சம் 150 இடங்களையாவது பெற்று ஆட்சி அமைக்கும் என உறுதியாக சொல்கிறோம் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.