ஒலிம்பிக் போட்டி முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஒலிம்பிக்: கோல்ஃப் போட்டியில் பதக்க வாய்ப்பை இழந்தார் இந்திய வீராங்கனை

டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் கோல்ஃப் போட்டியில் இந்திய வீராங்கனை அதிதீ அசோக் பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.

நான்கு சுற்றுகளாக நடைபெறும் இந்த போட்டியில் 3-வது சுற்று நிறைவில் அதிதி அசோக் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருந்தார். இறுதிச்சுற்றில் 4வது இடத்திற்கு பின்தங்கிய அவர் பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பைத் தவறவிட்டார். அமெரிக்க வீராங்கனை நெல்லி கோர்டா முதலிடம் பிடித்தார்.

மல்யுத்தத்தில் காலிறுதியில் 2- 1 என்ற கணக்கில் ஈரான் வீரர் மோர்டஸாவை வீழ்த்தி இந்திய வீரர் பஜ்ரங் புனியா அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 65 கிலோ எடைப்பிரிவில் அரையிறுதிப் போட்டியில் அஜர்பைஜான் வீரருடன் மோதிய பஜ்ரங் புனியா, 12-5 என்ற புள்ளிக்கணக்கில் தோல்வியடைந்தார்.

அரையிறுதி போட்டியில் தோற்றதால் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இன்று பஜ்ரங் புனியா மோதவுள்ளார்.

Advertisement:
SHARE

Related posts

கணவரை பிரிவதாக அறிவித்தார் நடிகை சமந்தா

Saravana Kumar

வங்கதேச சுற்றுப்பயணம்: இலங்கை கேப்டனாக குசால் பெரேரா நியமனம்!

Halley karthi

உலக அளவில் இப்படியொரு சாதனை படைத்த சூர்யாவின் ’சூரரைப் போற்று’!

Halley karthi