முக்கியச் செய்திகள் தமிழகம்

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. முந்தைய தேர்வுகளில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியலில் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அந்த தேர்வில் தேர்வுகளில் தோல்வியடைந்தவர்கள் மற்றும் தனித்தேர்வு எழுதுபவர்களுக்கான தேர்வுகள் செப்டம்பர் 16 முதல் துவங்கி, 30ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் 10ஆம் வகுப்பு துணை தேர்வு செப்டம்பர் மாதம் 16 முதல் 28-ஆம் தேதி வரையும், 11-ஆம் வகுப்பு துணை தேர்வுகள் செப்டம்பர் மாதம் 15 முதல் 30 வரையும் நடத்தப்படும். இந்த துணைத்தேர்வு எழுதுபவர்கள், இன்று முதல் 11ஆம் தேதி வரை அரசு தேர்வுகள் சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்வுக்கு விண்ணப்பிப்பது குறித்த விவரங்களை http://www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
SHARE

Related posts

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பதவி ஏற்றார் ஆர்.என்.ரவி

Ezhilarasan

’பாலியல் தொல்லையால் சாகுற கடைசி பொண்ணு நானாகத்தான் இருக்கணும்’- பிளஸ் டூ மாணவி தற்கொலை

Halley karthi

நடுவானில் அமெரிக்க விமானத்தில் குழந்தை பெற்ற ஆப்கான் பெண்

Gayathri Venkatesan