கொழும்பு, துபாயில் இருந்து உள்ளாடைகுள் கடத்தி வந்த ரூ.2 கோடியே 2 லட்சத்தி 77 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததோடு 3 இலங்கை வாலிபர் உள்பட 8 பேர் கைது செய்தனர்.
சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் பயணம் செய்த 2 வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் உடைமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அட்டை பெட்டிகளில் தங்க பவுடரை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டனர். இவர்களிடம் இருந்து ரூ. 43 லட்சத்தி 16 ஆயிரம் மதிப்புள்ள 860 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதுப்போல் துபாயில் இருந்து வந்த மற்றொரு விமானத்தில் பயணம் செய்த வாலிபரின் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவரிடம் இருந்து ரூ. 37 லட்சத்தி 34 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 585 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
On 18.02.23, 5 pax who arrived from Dubai and Colombo by EK542, EK544 & AI274 were intercepted by Customs. On search of their person and checked-in baggage, 2234 gms of gold valued at ₹1.12 Crore was recovered/ seized under the Customs Act, 1962. pic.twitter.com/O8X65FIzjH
— Chennai Customs (@ChennaiCustoms) February 20, 2023
கொழும்பில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் பயணம் செய்த 2 இலங்கை வாலிபர்கள் உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டு பிடித்தனர். இவர்களிடம் இருந்து ரூ. 31 லட்சத்தி 62 ஆயிரம் மதிப்புள்ள 630 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
அதுப்போல் துபாயில் இருந்து வந்த வாலிபரின் உள்ளாடையில் இருந்து ரூ. 39 லட்சத்தி 75 ஆயிரம் மதிப்புள்ள 792 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள். மேலும் கொழுப்பில் இருந்து சென்னை வந்த பயணியின் உள்ளாடைக்குள் இருந்து ரூ. 19 லட்சத்தி 57 ஆயிரம் மதிப்புள்ள 390 கிராம் தங்கத்தை கைப்பற்றினார். அதே போல் துபாயில் இருந்து வந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த வாலிபரின் உள்ளாடைக்குள் இருந்து ரூ. 30 லட்சத்தி 71 ஆயிரம் மதிப்புள்ள 612 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.
2 நாளில் சுங்க இலாகா அதிகாரிகள் நடத்திய சோதனையில் கொழும்பு, துபாய் ஆகிய நாடுகளில் வந்த 3 இலங்கை வாலிபர்கள் உள்பட 8 பேரிடம் இருந்து ரூ. 2 கோடியே 2 லட்சத்தி 15 ஆயிரம் மதிப்புள்ள 4 கிலோ 28 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 3 இலங்கை வாலிபர்கள் உள்பட 8 பேரை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள் கடத்தலில் பிண்ணனியில் உள்ளவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.