திருச்சி : வாசனை திரவியத்தில் மறைத்து கடத்தி வரப்பட்ட 1.3 கிலோ தங்கம் பறிமுதல்..!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, கடத்தி வரப்பட்ட 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும்…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா மற்றும் துபாய் உள்ளிட்ட நாடுகளில் இருந்து, கடத்தி வரப்பட்ட 1.3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு கோலாலம்பூர், சிங்கப்பூர் மற்றும் துபாயிலிருந்து விமானங்கள் மூலம் வந்த பயணிகளின் உடைமைகளை,
விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது
8 பயணிகளின் உடைமைகளில் இருந்த வாசனை திரவியம் தெளிக்கும்
பாட்டில்கள், கைப்பை மற்றும் உணவுப்பொருளில் மறைத்து வைத்து கடத்தி
வந்த தங்க தகடுகள் பறிமுதல் செய்தனர்.

மேலும், மெல்லிய தண்டு வடிவிலான 24 காரட் தூய்மையான 1313.00 கிராம்
தங்கமும், 22 காரட் தூய்மையான 25.00 கிராம் தங்கம் என மொத்தம் 1.3 கிலோ
எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். ரூ.79.12 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை
பறிமுதல் செய்ததோடு, தங்கம் கடத்தி வந்த விமான பயனர்களிடம் சுங்கத்துறை
அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், 36 மணி நேரத்தில் சுமார் மூன்று விமானங்களில் வந்த சுமார் 8 பயனிகளிடம்
இருந்து, 1.3 கிலோ வரை தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம்
அதிகாரிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிங்கப்பூர், மலேசியா, துபாய், மற்றும் சார்ஜா போன்ற நாடுகளில் இருந்து வருகை தரும் பயணிகள், நூதன முறையில் தங்கத்தை கடத்தி வருவது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

கு. பாலமுருகன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.