GOLD RATE | தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.290 அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில தினங்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்தது. அத்ன்படி நேற்று சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு தங்கம் ரூ.225 குறைந்து ரூ.13,950-க்கும், சவரனுக்கு ரூ.1,800 குறைந்து ரூ.1,11,600-க்கும் விற்பனை செய்யப்படுட்டது. அதேபோல வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.250-க்கும், ஒரு கிலோ ரூ.250,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராமுக்கு ரூ.290 உயர்ந்து ரூ.14,240-க்கும், சவரனுக்கு ரூ.2,320 உயர்ந்து 1,13,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் உயர்ந்து காணப்படுகிறது. அதன்படி ஒரு கிராம் வெள்ளி ரூ.5 உயர்ந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.