GOLD RATE | தங்கம் விலை அதிரடி சரிவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்துள்ளது.

தங்கம் விலை சர்வதேச பொருளாதார நிலைகளுக்கு ஏற்ப மாற்றம் கண்டு வருகிறது. இதனிடையே நேற்று தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை நேற்று காலை கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்திருந்தது. தொடர்ந்து நேற்று மாலை தங்கம் விலை கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்தது. ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் மாத தொடக்க நாளான இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ஒரு கிராம் ரூ.13,100-க்கும், ரூ.800 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி விலை மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.245-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.