தங்கம் விலை தினந்தோறும் புது புது ஆச்சரியங்களை ஏற்படுத்தி வருகிறது. அதன் படி தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,200-க்கும், ஒரு சவரன் ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.270-க்கும், ஒரு கிலோரூ. 2,70,000-க்கும் விற்பனையானது.
தங்கம் விலை
தங்கம் விலை இன்று சற்றே உயர்ந்துள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 30 உயர்ந்து ஒரு கிராம் ரூ 14, 230-க்கும், சவரனுக்கு ரூ. 240 உயர்ந்து ஒரு சவரன் ரூ. 1, 13, 840- க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை
வெள்ளி விலையில் மாற்ற மில்லை. அதன் படி ஒரு கிராம் வெள்ளி ரூ. 270-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ. 2,70,000-க்கும் விற்பனையாகிறது.







