GOLD RATE | தொடர்ந்து உயரும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ25. உயர்ந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த வாரம் தொடக்கத்தில் இருந்தே தங்கத்தின் விலை ஏற்றத்தை கண்டது. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.75 உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,230-க்கும், சவரனுக்கு ரூ.600 உயர்ந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 5 ஆயிரத்து 840 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ25 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.13,255-க்கும், சவரனுக்கு ரூ. 200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1,06,040-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில் வெள்ளி விலை 3-வது நாளாக மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.