GOLD RATE | தொடர்ந்து சரியும் தங்கம் விலை!

தங்கம் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கு ஏற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகின்றது. இதனிடையே தங்கம் விலை கடந்த 10, 11ம் தேதிகளில் விலை உயர்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதனிடையே தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.230 குறைந்து ரூ.14 ஆயிரத்து 200-க்கும், சவரனுக்கு ரூ.1,840 குறைந்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில், ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.130 குறைந்து ரூ.14,070-க்கும், சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. வெள்ளி விலை ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.