GOLD RATE | தங்கம் விலை சற்று உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 அதிகரித்துள்ளது

தங்கம் விலை கடந்த வாரம் தொடர்ந்து ஏற்றத்துடன் காணப்பட்டது. அந்த வகையில் கடந்த வார இறுதிநாளில் தங்கத்தின் விலை உயர்ந்து காணப்பட்டது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.100 அதிகரித்து ரூ.14,950-க்கும், வரனுக்கு ரூ.800 அதிகரித்து ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி வில மாற்றமின்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுட்டது.

இந்த நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று சற்று உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.80 உயர்ந்து ரூ.15,030-க்கு விற்பனை; ஒரு சரவன் தங்கம் ரூ.640 உயர்ந்து ரூ.1,20,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை போன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று வெள்ளி 1 கிராமிற்கு ரூ.5 உயர்ந்து ரூ.275-க்கு விற்பனை; 1 கிலோ வெள்ளி ரூ.5000 உயர்ந்து ரூ.2,75,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.