GOLD RATE: தங்கம் விலை சற்றே உயர்வு…!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்துள்ளது.

சர்வதேச பொருளாதார நிலவரங்களுக்கேற்ப தங்கம் விலை ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அதன் படி நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.13,100-க்கும், சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.1,04,800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்றே உயர்வு கண்டுள்ளது. அதன் படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,135-க்கும், சவரனுக்கு ரூ.280 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1,05,080-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றமில்லை. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.235-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 35 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.