Gold Rate | தங்கம் விலை அதிரடி உயர்வு!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு, தங்கம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து ஆட்டம் காட்டியது. இருப்பினும், தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது.

இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.5,040 உயர்ந்து ரூ.1,19,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.630 உயர்ந்து ரூ.14,900-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.320-க்கும் பார் வெள்ளி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.