தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இதனையடுத்து, தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு 320 ரூபாயும், நேற்று சவரனுக்கு 720 ரூபாயும் குறைந்து ஒரு சவரன் ரூ.84ஆயிரத்து 80-க்கு விற்பனையானது. இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் தங்கம் ரூ.10ஆயிரத்து 550-க்கும் சவரனுக்கு 320 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.84ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று கிராமுக்கு 3 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 153 ரூபாய்க்கும் கிலோவுக்கு மூவாயிரம் உயர்ந்து பார் வெள்ளி ஒரு லட்சத்து 53 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.








