தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. கடந்த சில தினங்களாகவே தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறட்து. அந்தவகையில் நேற்று காலை குறைந்த தங்கத்தின் விலை மாலையில் உயர்ந்தது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.160 உயர்ந்து ரூ.14,200-க்கும், சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.1,13,600-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் உயர்ந்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 உயர்ந்து ரூ.14,220-க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,13,760-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்துள்ள நிலை வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி, சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2.55 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.




