தங்கம் விலை தினமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வருகிறது. ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதுமாக இருந்து வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் 17ம் தேதி ஒரு சவரன் ரூ.97ஆயிரத்து 600 என்ற உச்சத்துக்கு சென்றது. மீண்டும் அதே மாதம் 28-ம் தேதி ஒரு சவரன் ரூ.88ஆயிரத்து 600 என்ற நிலைக்கு வந்தது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை மீண்டும் உச்சத்தை நோக்கி பயணித்து வருகிறது.
இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.20-ம், சவரனுக்கு ரூ.160-ம் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,000-க்கும், சவரன் ரூ.96,000-க்கும் விற்பனையானது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.40 அதிகரித்து ஒரு கிராம் ரூ.12,040-க்கும், சவரனுக்கு ரூ.320 அதிகரித்து ஒரு சவரன் ரூ.96,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.199-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 99 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.







