GOLD RATE | தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.125 குறைந்துள்ளது.

தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ரூ.14,270-க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ரூ.1,14,160-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சற்று குறைந்துள்ளது. அந்தவகையில் சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.125 குறைந்து ரூ.14,145-க்கும், சவரனுக்கு ரூ.1,000 குறைந்து ரூ.1,13,160-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில் வெள்ளி விலை மாற்றமின்றி காணப்படுகிறது. அதன்படி வெள்ளி ஒரு கிராம் ரூ.255-க்கும், ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 55 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.