தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. அதன்படி நேற்று முந்தினம் சென்னையில் ஆபரண தங்கம் கிராமிற்கு ரூ.20 குறைந்து ரூ.15,010-க்கும் சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.1,20.080-க்கும் விற்பனை செய்யப்பட்டது. தங்கத்தைப் போன்று வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ.265-க்கும் கிலோவிற்குப் ரூ.10,000 குறைந்து ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்று தங்கத்தின் விலை மாற்றமின்றி அதே விலை தொடர்ந்தது.
இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை குறைந்து காணப்படுகிறது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு ரூ.70 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.14,940-க்கும், சவரனுக்கு ரூ.560 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.1,19,520-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளி விலை மாற்றமின்றி ஒருகிராம் ரூ.265-க்கும், ஒரு கிலோ ரூ.2,65,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.




