தங்கம் விலை நாளுக்கு நாள் ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகிறது. அந்த வகையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.110 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14,255க்கும், சவரனுக்கு ரூ.880 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.1,14,040க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.240 குறைந்து ஒரு கிராம் ரூ.14,015க்கும், வரனுக்கு ரூ.1,920 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,12,112க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது, அதன்படி, வெள்ளி கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.245-க்கும், கிலோவுக்கு 10,000 குறைந்து, ஒரு கிலோ ரூ.2,45,000 விற்பனை செய்யப்பட்டு வருகிறது.




