சீனாவின் ஷான்தோங் மாநிலத்தின் கிங்டாவோ துறைமுகத்தில் லைபீரிய கொடியுடன் ஓஷன் மெலடி என்ற சரக்கு கப்பல் பராமரிப்பு மற்றும் பழுது பார்ப்பு பணிகளுக்காக நிறுத்தப்பட்டிருந்தது. இந்த கப்பலில் மொத்தம் 42 பேர் இருந்தனர். இந்த கப்பலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது, 25 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்து நடந்த இடத்திலிருந்து இதுவரை 17 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 5 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்திற்கான காரணம் குறித்து சீனத் துறைமுக அதிகாரிகளும் தீயணைப்பு துறையினரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.




