தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.
இந்த சூழலில் தங்கம் விலை கடந்த 16ம் தேதி ஒரு சவரன் ரூ.82 ஆயிரத்தை தாண்டி இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது. இதனை தொடர்ந்து நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.10-ம், சவரனுக்கு ரூ.80-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 230-க்கும், ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10,290-க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து, ஒரு சவரன் ரூ. 82ஆயிரத்து 320-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இந்நிலையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.2-ம், கிலோவுக்கு ரூ.2,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.145-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.








