சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. கடந்த சில மாதங்களாக தங்கம் புதிய உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், தங்கம் விலை கடந்த டிச.22ம் தேதி ரூ.1 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன்பிறகு, தங்கம் ஏற்ற இறக்கத்தை சந்தித்து ஆட்டம் காட்டியது. இருப்பினும், தங்கம் விலை ரூ.1 லட்சத்திற்கு குறையாமல் விற்பனையாகி வருகிறது.
அந்த வகையில், தங்கம் விலை கடந்த 20-ம் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தையும், நேற்று முன்தினம் ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தையும் கடந்திருந்தது. நேற்று விலை குறைந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்துக்கு கீழ் வந்திருக்கிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன்படி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.450 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,650-க்கும், சவரனுக்கு ரூ.3,600 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.1,17,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்துள்ளது. வெள்ளி விலையை பொறுத்தவரையில், ஒரு கிலோ வெள்ளி இன்று ரூ.20,000 உயர்ந்து, ரூ.3,60,000-க்கும், கிராமுக்கு ரூ.20 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.360-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.







