தங்கம் விலை அதிரடி உயர்வு – இன்றைய நிலவரம் என்ன?

தங்கம் விலை கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், நேற்று காலை தங்கம் விலை சற்று குறைந்தது. அதாவது கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.9ஆயிரத்து 970-க்கும், சவரனுக்கு ரூ.280 குறைந்து சவரன் ரூ.79 ஆயிரத்து 760-க்கு விற்பனையானது.

இதனிடையே நேற்று மாலை தங்கம் விலை மீண்டும் அதிகரித்தது. கிராமுக்கு ரூ.90-ம்,சவரனுக்கு ரூ.720-ம் அதிகரித்தது. அதன்படி நேற்று ஒரு கிராம் தங்கம் விலை ரூ.10 ஆயிரத்து 60-க்கும், சவரனுக்கு ரூ.80 ஆயிரத்து 480-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில் தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 90 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 150-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சவரனுக்கு ரூ.720 உயர்ந்து ஒரு சவரன் ரூ.81 ஆயிரத்து 200-க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் இன்று மாற்றமின்றி, ஒரு கிராம் வெள்ளி ரூ.140-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.