எகிறிய தங்கம் விலை… 5 நாட்களில் சவரனுக்கு ரூ.1,980 அதிகரிப்பு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை, இந்த மாதம் தொடக்கத்தில்…

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் முழுவதும் உயர்ந்த தங்கம் விலை, இந்த மாதம் தொடக்கத்தில் இருந்து சரிந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த வார தொடக்கத்திலிருந்து விலை அதிகரிக்க தொடங்கியது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,980 உயர்ந்துள்ளது.  இன்று மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.57 ஆயிரத்து 800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.7.225-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில் வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,01,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.