தங்கம் விலை கடும் வீழ்ச்சி: இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (நவம்பர் 20) ஒரு கிராமுக்கு ரூ.470 குறைந்துள்ளது.

தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் தொடர்ந்து ஏற்ற இறக்கங்களை சந்தித்து வருகின்றன. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க டாலரின் மதிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தினசரி விலையில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இதனிடையே நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.235-ம் சவரனுக்கு ரூ.1880-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,980 க்கும், ஒரு சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் இன்று (நவம்பர் 20) ஆபரணத் தங்கம் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.470 குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.11,510-க்கும், சவரனுக்கு ரூ.3760 குறைந்து ஒரு சவரன் ரூ.92,080-க்கு விற்பனையாகிறது. கடந்த 11 நாட்களில் மட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு சவரனுக்கு ரூ.13,960 குறைந்துள்ளது.

வெள்ளி விலையும் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்று வெள்ளி விலை மேலும் குறைந்துள்ளது. அதன்படி, இன்று வெள்ளி ஒரு கிராமுக்கு ரூ.5-ம், கிலோவுக்கு ரூ.5000 குறைந்து, ஒரு கிராம் ரூ.175-க்கும், ஒரு கிலோ ரூ.1.75 லட்சத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து குறைந்து வருவது புதிதாக நகைவாங்குவோருக்கு மகிழ்ச்சியையும், தங்கத்தை அடகு வைத்துள்ளோருக்கு கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.