தொடர்ந்து உயரும் தங்கம் விலை…!

சென்னையில் ஆபரணத்தங்கம் சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.63760-க்கு விற்பனையாகிறது.

பொருளாதார சூழலுக்கு ஏற்ப தங்கம் விலை அவ்வப்போது ஏறுவதும், இறங்குவதும் உண்டு. இந்நிலையில் கடந்த ஒரு வாரமாக தங்கம் விலை ஏறிக்கொண்டே செல்கிறது.

அதன்படி நேற்று ஆபரணத்தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 7,940 என விற்பனையாகி வந்த நிலையில், இன்று கிராமிற்கு ரூ. 30 உயர்ந்து ரூ. 7,970 க்கு விற்பனையாகிறது. ஒரு சவரன் நேற்று ரூ. 63 ஆயிரத்து 520க்கு விற்பனையாகி வந்த நிலையில், இன்று ரூ. 240 உயர்ந்து ரூ.63ஆயிரத்து 760க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலை மாற்றம் இன்றி கிராம் ரூ.108 க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 8 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.