Gold Rate | தொடர்ந்து குறையும் தங்கம் விலை – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 915 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது.

இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2 ஆயிரத்து 440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71ஆயிரத்து 440-க்கும் விற்பனையானது.

இந்த நிலையில், வார தொடக்க நாளான இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 8 ஆயிரத்து 915 ரூபாய்க்கும் சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 71 ஆயிரத்து 320 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலையில் மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி 119 ரூபாய்க்கும் பார் வெள்ளி 1 லட்சத்து 19 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.