தங்கம் விலை குறைவு – இன்றைய நிலவரம் என்ன?

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 840 க்கு விற்பனையாகிறது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

தொடர்ந்து, படிப்படியாக உயர்ந்த தங்கம் விலை சமீபத்தில் ரூ.74 ஆயிரத்தை கடந்து வரலாற்றில் புதிய உச்சத்தை தொட்டது. இதனையடுத்து, தங்கம் விலை கடந்த ஏற்ற இறக்கத்தை சந்தித்து வருகிறது.

அந்த வகையில் தங்கம் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.200 உயர்ந்து, ஒரு பவுன் ரூ.73 ஆயிரத்து 880 ஆக விற்பனையானது. ஒரு கிராம் தங்கம் ரூ.9 ஆயிரத்து 235 க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று எந்தவித மாற்றமும் இன்றி தங்கம் விற்பனையானது.

இந்த நிலையில், இன்று தங்கம் விலை சற்று குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 குறைந்து, ஒரு சவரன் ரூ.73 ஆயிரத்து 840 க்கு விற்பனையாகிறது. கிராமுக்கு ரூ. 5 குறைந்து ரூ.9,230 க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ. 120 க்கு விற்பனையாகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.