சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை எப்பொழுதும் ஏறி, இறங்கி வருவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு ஏப்ரல் மாத தொடக்கத்திலிருந்தே தங்கத்தின் விலை உயர்ந்து வந்தது. இதையடுத்து கிடுகிடுவென தங்கம் விலை அதிகரித்து சவரனுக்கு ரூ. 53 ஆயிரத்தை எட்டியது. இந்த தொடர் விலையேற்றம் நடுத்தர மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
ஒரு சவரன் ஆபரணத்தங்கம் நேற்று ரூ.53,840க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.160 குறைந்து ரூ.53, 680க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றம் இல்லாமல் ஒரு கிராம் ரூ.86.50க்கும் ஒரு கிலோ ரூ.86,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.