முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோகுல்ராஜ் கொலை வழக்கு; அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நீதிபதிகள் நேரடியாக ஆய்வு, 200க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு

கோகுல்ராஜ் கொலை வழக்கு தொடர்பாக  அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நீதிபதிகள் நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர். 200க்கும் மேற்பட்ட போலிசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சேலம் மாவட்டம் ஓமலுரை சேர்ந்த கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை
விதிக்கப்பட்ட யுவராஜ் உள்ளிட்ட 10 பேரின் மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த வழக்கின் முக்கிய சாட்சியான சுவாதியிடம் விசாரித்தபோது  வீடியோ காட்சிகளை ஒளிபரப்பி நீதிபதிகள் சில கேள்விகளை எழுப்பினர். அதற்கு அவர் முன்னுக்கு பின்  முரணாக பதிலளித்ததால்  விசாரணை நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றத்திலும் சுவாதி மாறி மாறி சாட்சியம் அளித்ததாக கூறி, நீதிமன்றமே தாமாக முன்வந்து அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்தது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு
முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்த போது, சுவாதிக்கு பதிலாக அவரது  கணவர் ஆஜரானார். சுவாதி கர்ப்பமாக இருப்பதால் ஆஜராக முடியாத நிலை உள்ளதாக சுவாதியின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் பின்ன்ர் ஜனவரி 22ல் நேரடியாக சென்று ஆய்வு செய்யவுள்ளதாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்த நிலையில் இன்று திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நீதிபதி நேரடியாக ஆய்வு செய்து வருகின்றனர்.

கோகுல்ராஜ் சுவாதியுடன் கோவிலுக்குல் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது. கோவிலில் இருந்து வெளியே வரும் காட்சிகளும் இருந்தன. ஆனால் யுவராஜ் தரப்பினர்  கோவிலுக்குள் சென்று பின்னர்  வெளியே வரும் காட்சிகள் பதிவாகவில்லை. எனவே கோவில் இருந்து கோகுல்ராஜ் எந்த வழியில் வெளியேறினார் என்பது குறித்து நீதிபதிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்

அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் அறநிலையத்துறை முன்னாள் உதவி ஆணையாளர் இருந்த சூரிய நாராயணன், சிசிடிவி காட்சிகள் பதிவான HARD DISC ஐ போலீசாரிடம் ஒப்படைத்த பணியாளர் தங்கவேல்  நீதிபதிகள் சிசிவிடி ஆதாரம் தொடர்பாக கேட்டு அறிந்தனர்.

கோகுல்ராஜ் மற்றும் சுவாதி ஆகியோர் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இடங்களை பார்வையிட்டு அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்களையும் நீதிபதிகள் ஆய்வு செய்தனர். மேலும் கோவில் மேற்கு வாயில்,கொடி மரம்,ராஜ கோபுரம் உள்ளிட்ட இடங்களில் வைக்கப்பட சிசிடிவிகளையும் நீதிபதிகள்  பார்வையிட்டனர். திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவில் வளாகம் முழுவதும் காவல் துறையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

டி ஐ ஜி ராஜேஸ்வரி தலைமையில் எஸ்.பி, டி எஸ் பி என 200 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.  திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் நீதிபதிகள் ஆய்வு செய்து வரும் நிலையில் உயிரிழந்த கோகுல்ராஜின் தாய் சித்ரா மற்றும்  கோகுல்ராஜ் தர்ப்பு வழக்கறிஞர்களும் வருகை புரிந்துள்ளனர்.

இந்த நிலையில் யுவராஜ் தரப்பு வழக்கறிஞரும் கோவிலுக்கு வருகை தந்துள்ளார். அவர் கூறியதாவது..” வழக்கு நேர்மையான சென்று கொண்டு இருக்கின்றது. நல்ல நீதிபதிகளில் கையில் வழக்கு உள்ளது நல்ல தீர்ப்பு வரும் எது நியாயமோ, அது நடக்கும். சிசிடிவி காட்சிகளை பார்க்க நான் வரவில்லை ” என யுவராஜ் தரப்பு வழக்குரைஞர்  தெரிவித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ஐபிஎல்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி!

EZHILARASAN D

பான் -ஆதார் இணைப்பு கால அவகாசம் நீட்டிப்பு

EZHILARASAN D

திமுக வேட்பாளர் ஜீவா ஸ்டாலினுக்கு மாற்றாக கு.சின்னத்துரை!

Jeba Arul Robinson