கோகுல்ராஜ் கொலை வழக்கில் அவரது தாயர் தாக்கல் செய்த மனுவை ஏற்று கொண்ட உயர்நீதிமன்ற மதுரைகிளை, சிபிசிஐடி தாக்கல் செய்த மேல்முறையிட்டு மனுவை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது.
கோகுல்ராஜ் கொலை வழக்கில் கீழமை நீதிமன்றம் 5 பேரை விடுதலை செய்து பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக்கோரி கோகுல்ராஜின் தாயார் சித்ரா மற்றும் சிபிசிஐடி
தரப்பில் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அப்போது, கோகுல்ராஜ் தாயார் சித்ரா தாக்கல் செய்திருந்த மனுவில், ” எனது மகன் கோகுல்ராஜ் ஆணவ படுகொலை செய்யப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்றம் 10 நபர்களை குற்றவாளிகளாக
அறிவித்து தண்டனை வழங்கியது.
நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்
அதேசமயம் சங்கர், அருள் செந்தில், செல்வகுமார், தங்கதுரை, சுரேஷ் ஆகிய 5 பேரையும் விடுதலை செய்து உத்தரவு பிறப்பித்தது. இந்த வழக்கு விசாரணையின் போது விடுதலை செய்த 5 பேருக்கும் குற்ற சம்பவத்தில் தொடர்பு இருப்பதை கருத்தில் கொள்ளாமல் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ஆகவே இதனை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றும் தாமதமாக மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் நிலையில் அதனை ஏற்று மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்க வேண்டும்” என கூறியிருந்தார்.
இதே போல கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஐந்து பேர் விடுதலையை எதிர்த்து சிபிசிஐடி தரப்பிலும் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இவற்றை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஹேமலதா அமர்வு, கோகுல் ராஜின் தாயாரின் மேல்முறையீட்டு மனுவை விசாரணைக்கு ஏற்றும் சிபிசிஐடி தாக்கல் செய்த மேல் முறையிட்டு மனு விசாரணையை ஆகஸ்ட் 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டனர்.
– இரா.நம்பிராஜன்