தமிழ்நாட்டில் உள்ள தமிழ் கடவுள்கள் தமிழைதான் விரும்புவார்கள் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.
சென்னை துறைமுகம் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், சீர்திருத்த திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டன. 3 இணையர்களின் சீர்திருத்த திருமணங்களை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு ஆகியோர் நடத்தி வைத்தனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் எ.வ.வேலு, திராவிட மாடல் ஆட்சி என்றால் நம்மவர்களின் ஆட்சி என்றும் மந்திரம் என்பது சமஸ்கிருதம், திராவிட திருமணம் என்றால் தமிழ்த் திருமணம் என்றும் விளக்கமளித்தார்.
சமஸ்கிருதம் என்றால் எவருக்கும் புரியாது, நீடு புகழோடு வாழ்வாங்கு வாழ வேண்டும் என்று தாய்மொழியான தமிழில் வாழ்த்துகிறோம் என்றார். அனைவருக்கும் புரிவதால் இது திராவிட திருமணம் என கூறினார். கோயில்களில் நம்முடைய கடவுள்களும் தமிழையே விரும்புவார்கள். தமிழ்நாட்டில் தமிழ்க்கடவுள்களெல்லாம் தமிழைத்தான் விரும்புவார்கள் என்றும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார்.
– இரா.நம்பிராஜன்








