பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு போளூர் ஆட்டுச் சந்தையில் சுமார் 2 கோடி ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை ஆனது.
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ஆட்டுச் சந்தையில் விற்பனை களைகட்டியது. ஆரணி ,சேத்துப்பட்டு, கலசப்பாக்கம், ஜமுனாமரத்தூர் வனப்பகுதி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான வெள்ளாடு, செம்மறி ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வரப்பட்டிருந்தன.
திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம் ,ஈரோடு, திண்டுக்கல், தேனி, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஆந்திரா கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து இஸ்லாமியர்கள், மற்றும் வியாபாரிகள் ஆடுகளை வாங்கிச் சென்றனர். ரூ. 8 ஆயிரம் முதல் 27 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனை ஆனது. சுமார் ரூ. 2 கோடிக்கு ஆடுகள் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.





