திரையரங்கில் ரசிகர்கள் Vibe செய்த #GOAT படத்தின் ‘மட்ட’ பாடல் வெளியானது!

விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் மட்ட பாடல் வெளியானது. விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் செப்டம்பர்…

விஜய் நடிப்பில் வெளியான கோட் படத்தின் மட்ட பாடல் வெளியானது.

விஜய் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் பிரமாண்ட பொருட் செலவில் உருவான திரைப்படம் தி கோட். பெரும் எதிர்பார்ப்புகளுடன் செப்டம்பர் 5ம் தேதி வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை வாரிக் குவித்து வருகிறது.

டிக்கெட் முன்பதிவிலேயே பெரும் சாதனை படைத்த இப்படம், முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 126 கோடி ரூபாய் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனமே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதைதொடர்ந்து, இரண்டாவது நாளில் இந்தியாவில் மட்டும் சுமார் 25 கோடி ரூபாய் வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின.

இந்தியா மட்டுமின்றி 30-க்கும் அதிகமான வெளிநாடுகளிலும் தி கோட் திரைப்படம் வெளியாகியுள்ளது. அங்கும் இப்படத்திற்கு ஏகோபித்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதன் காரணமாக வெளியான மூன்றே நாட்களில் ஒட்டுமொத்தமாக இப்படம், சுமார் 215 கோடி ரூபாயை கடந்தது. தற்போது திரைப்படம் வெளியாகி 13நாட்களை கடந்து இப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 13 நாட்களில் மொத்தமாக ரூ.413கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில்,கோட் படத்தின் ‘மட்ட’ எனத் துவங்கும் பாடலின் வீடியோ இணையத்தில் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இப்பாடலுக்கு விஜய் உடன் நடிகை திரிஷா நடனமாடி இருந்தார். இந்த பாடல் திரையரங்குகளில் ரசிகர்களின் ஆரவாரத்தில் உற்சாக வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது வீடியோ பாடலாக வெளியாகியுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.