அதிக திரைகளில் வெளியாகும் GOAT! – வசூல் சாதனை படைப்பாரா விஜய்?

உலகம் முழுவதும் விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் கிட்டத்தட்ட 5000 திரைகளில் வெளியாகவுள்ள நிலையில், வசூல் சாதனை செய்யுமா என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான…

#GOAT release in more screens! - Will Vijay make a collection record?

உலகம் முழுவதும் விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் கிட்டத்தட்ட 5000 திரைகளில் வெளியாகவுள்ள நிலையில், வசூல் சாதனை செய்யுமா என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘லியோ’ திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட்  ஆஃப் ஆல் டைம்ஸ் படத்தை (GOAT – Greatest Of All Times) வெங்கட் பிரபு  இயக்கியுள்ளார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி விநாயகர் சதுர்த்தியன்று வெளியாக உள்ளது. இது விஜய் அரசியலுக்கு வந்த பிறகு வெளியாகும் முதல் படமாகும். இதனால் விஜய் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்போடு உள்ளனர்.

இந்த திரைப்படத்தின் பாடல்கள், டிரெய்லர் வெளியாகி படத்தின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது. இந்த சூழலில், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்தின் 4-வது பாடலான ‘மட்ட’ பாடல் நேற்று முன்தினம் வெளியானது. இப்பாடல் இணையத்தில் வைரலானது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கி உள்ள நிலையில், இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் புரமோஷன் பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றனர்.தமிழ்நாடு மற்றும் கேரளாவில் முதல்நாள் முதல் காட்சிகளைப் பார்க்க பலரும் போட்டிபோட்டு கொண்டு டிக்கெட் வாங்கி வருகின்றனர்.

இதையும் படியுங்கள் : Japan | என்னது 12 வருடமாக அரை மணி நேரம் தூக்கம் தானா? யார் இந்த அதிசய மனிதர் #Daisuke Hori?

முக்கியமாக, கேரளத்தில் இதுவரை டிக்கெட் முன்பதிவு வாயிலாகவே இப்படம் ரூ. 1.50 கோடியை ஈட்டியுள்ளது. மேலும், கேரளத்தில் மட்டும் முதல்நாளில் 700 திரைகளில் 4000 காட்சிகளுடன் கோட் வெளியாகிறது. இதுவே, கேரளத்தின் இதுவரையிலான மிகப்பெரிய வெளியீடு என அப்படத்தின் கேரள உரிமம் பெற்ற ஸ்ரீகோகுலம் மூவிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 1100 திரைகளிலும் வடமாநிலங்களில் 1000 திரைகளிலும் பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் என கிட்டத்தட்ட 5000 திரைகளில் கோட் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளதால் கோட் முதல் நாளில் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என்றே தெரிகிறது.

மேலும், முன்பதிவுகளிலும் பெரிய சாதனையைப் புரியவுள்ளது. விஜய் முழுநேர அரசியலுக்குள் வந்த பின் சினிமாவில் நடிக்க மாட்டேன் எனக் கூறியிருக்கிறார். இதனால், விஜய்யின் பெரிய கமர்சியல் திரைப்படம் இதுதான் என்பதால், முதல்நாளிலேயே கோட் படத்தைப் பார்த்துவிட வேண்டும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.தென்னிந்தியளவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் பல காட்சிகள் திரையிடப்பட உள்ளன. விஜய்யின் அதிகம் வசூலித்த திரைப்பட வரிசையில் முதலிடத்தில் லியோ (ரூ. 620 கோடி) இருக்கிறது. கோட் வெளியாகும் திரைகளின் எண்ணிக்கையையும், காட்சிகளையும் கணக்கிடும்போது லியோவின் வசூலை முறியடிக்கும் என்றே கணிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.