முக்கியச் செய்திகள் கட்டுரைகள் தமிழகம் செய்திகள் சினிமா

“மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ”


ஜ. முஹம்மது அலீ

கட்டுரையாளர்

தேசிய விருது பெற்ற முதல் தமிழ் திரைப்படம், அதுவும் எம்ஜிஆர் நடித்து ஆறு மொழிகளில் வெளியான முதல் திரைப்படம் எது தெரியுமா?..

நாட்டு நடப்புக்கு என்றும் பொருந்தும் மலைக்கள்ளன் திரைப்படத்தில் இடம்பெற்ற எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் என்ற பாடலை எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ். மாரியம்மன் என்ற திரைப்படத்தில் கவிஞராக அறிமுகமான ராமையாதாஸ், 250 படங்களுக்கு மேல் சுமார் இரண்டாயிரம் பாடல்களை எழுதியுள்ளார். புலவர் பட்டம் பெற்று பள்ளியில் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வந்த ராமையாதாஸ் சுதந்திரப் போராட்ட பாடல்களும் எழுதியுள்ளார். சுதந்திரம் கிடைத்த பின்னர் தனக்கு வழங்கப்பட்ட தியாகி என்ற பட்டம், பட்டயம் ஆகியவற்றை வேண்டாம் என மறுத்தவர் தஞ்சை ராமையாதாஸ்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

ஆசிரியராக இருக்கும்போதே நாடகத்துறையில் இருந்த ஆர்வம் காரணமாக நாடக குழுவில் சேர்ந்து ‘வாத்தியார்’ ஆனார். நடிகர் டி ஆர் மகாலிங்கம் மச்சரேகை என்ற படத்தை தயாரிக்க எண்ணியபோது அவருக்கு உதவியாக சென்னை வந்தார். ஆயிரம் தலை வாங்கிய அபூர்வ சிந்தாமணி என்ற திரைப்படத்தில் பாடல் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. எம்ஜிஆர் நடித்த குலேபகாவலி திரைப்படத்தில் சொக்கா போட்ட நவாபு என்ற பாடலும் மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ என்ற பாடலும் தஞ்சை ராமையாதாசை அடையாளம் காட்டியது.

ராமையாதாசின் பாடல் எழுதும் வேகத்தை கண்டு, எக்ஸ்பிரஸ் கவிஞர் என்று அழைத்தார் எம்ஜிஆர். பிரபல திரைப்பட தயாரிப்பு நிறுவனமான நாகிரெட்டியின் விஜயா வாஹினி நிறுவனம் தயாரித்த பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, மாயாபஜார் போன்ற படங்களுக்கு வசனம் பாடல்களை எழுதினார் தஞ்சை ராமையாதாஸ்.

இயக்குநர் ஸ்ரீதர் அமரதீபம் என்ற திரைப்படத்துக்கு பாடல் எழுதும்படி கேட்க, தஞ்சை ராமையாதாஸ் ஜாலியாக எழுதிய பாட்டுதான் ஜாலிலோ ஜிம்கானா என்ற டப்பாங்குத்து பாடல். காதல் முத்திரை பதிக்க மணாளனே மங்கையின் பாக்கியம் படப் பாடலான, அழைக்காதே நினைக்காதே அவைதனிலே என்னையே ராஜா என்ற பாடலும் எழுதுவார். கிராமத்து திருமண வீடுகளில் இப்போதும் மணப்பெண்ணுக்கு அவள் அண்ணன் புத்திமதி சொல்கிற மாதிரி அமைந்த புருஷன் வீட்டில் வாழப்போகும் பெண்ணே என்ற பாடலையும் எழுதியவர் தஞ்சை ராமையாதாஸ்.

காலத்தால் அழியாத பாடல்களை தந்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் என்றும் நிலைத்து நிற்கிறார் தஞ்சை ராமையாதாஸ்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் யார்? – ராகுல்காந்தி எம்.பி. பதில்

Dinesh A

”தமிழ்நாடு அரசு தோல்வி அடைந்து வருகிறது” – அண்ணாமலை

EZHILARASAN D

5 பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல் – ஆட்டோ ஓட்டுனர் உயிரிழப்பு

EZHILARASAN D