சூர்யா நடித்த படத்திலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருக்குமென எதிற்பார்க்கப்படுகிறது.
தமிழில் தற்போது முன்னணி நடிகர்களுள் ஒருவரான சூர்யாவுக்கு “சூரரைப் போற்று” திரைப்படத்தில் நடித்ததற்காகச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
தற்போது சூர்யா வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் எனும் படத்திலும் இயக்குனர் பாலா படத்திலும் நடித்து வருகிறார். மேலும், இன்று நேற்று நாளை பட இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார்.
அண்மையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்ற “விக்ரம்”திரைப்படத்தில் சிறப்புக்காட்சி ஒன்றில் வில்லனாகத் தோன்றி தனது அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், அண்ணாத்த படத்தை இயக்கிய இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தை “ஸ்டுடியோ கிரீன் -ஞானவேல் ராஜா” தயாரிக்க இருந்த நிலையில், தற்போது அவர் இந்த படத்தில் இருந்து வெளியேறியதாக கூறப்படுகிறது.
மேலும் , “சாஹோ” , “ ராதே ஷ்யாம்” போன்ற அதிக பொருட்செலவில் வெளியான படங்களைத் தயாரித்த பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான “யு வி கிரியேஷன் ”
இப்படத்தைத் தயாரிக்க முன்வந்துள்ளதாக தெரிகிறது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கவிருக்கும் இப்படத்தை எடுக்க அதிக செலவாகும் என்பதால் சிவா ‘ யு.வி கிரியேஷன் ’ நிறுவனத்தை அணுகி இருப்பதாகவும் இப்படம் ஒப்பந்தமாகும் பட்சத்தில் சூர்யா நடித்த படத்திலேயே இப்படம் தான் அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சூரியா -சிறுத்தை சிவா படத்தின் ஷூட்டிங் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய கூட்டணியில் உருவாக இருக்கும் படம் இந்த மாதம் 21-ஆம் தேதி தொடங்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வத் தகவல் விரைவில் வெளிவரும் எனவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.







