ஆஸி. வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனது மகன் லோகன் மேவரிக் உடன் ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 தொடர் நடத்தப்பட்டு வருகிறது. இதில், டிசம்பர் 31ஆம் தேதியான இன்று இந்திய நேரப்படி பிற்பகல் 1.40 மணிக்கும், ஆஸ்திரேலியா நேரப்படி மாலை 6.45 மணிக்கும் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ் மற்றும் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிகளுக்கு இடையிலான 20ஆவது போட்டி நடந்தது. இந்தப் போட்டியில் மெல்போர்ன் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
https://twitter.com/BBL/status/1741423900326785075
இதில் மெல்போர்ன் அணியின் கேப்டனாக மேக்ஸ்வெல் இடம் பெற்று விளையாடினார். இந்த நிலையில் தான் இந்த போட்டியின் போது கிளென் மேக்ஸ்வெல் தனது மகன் லோகன் மேவரிக் உடன் ஆங்கில புத்தாண்டை சிறப்பாக கொண்டாடியுள்ளார். மகனை வெளியில் தூக்கி வந்து பட்டாசு வெடிக்கும் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்துள்ளார்.







