“புர்ஜ் கலிபா அருகே ராட்சத பார்பி” – சமூக வலைத்தளங்களில் வைரல்!

புர்ஜ் கலிபா அருகே ராட்சத பார்பி பொம்மை இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.      இயக்குனர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், கிரேட்டா கெர்விக், வில் ஃபெரெல்,…

புர்ஜ் கலிபா அருகே ராட்சத பார்பி பொம்மை இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.     

இயக்குனர் கிரேட்டா கெர்விக் இயக்கத்தில் மார்கோட் ராபி, ரியான் கோஸ்லிங், கிரேட்டா கெர்விக், வில் ஃபெரெல், எம்மா மேக்கி, சிமு லியு, மைக்கேல் செரா, கேட் மெக்கின்னன் ஆகியோர் நடிப்பில் கடந்த ஜூலை 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் பார்பி.

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது. இந்த திரைப்படத்தை வார்னர் பிரதர்ஸ் வாங்கி வெளியிட்டுள்ளனர்.

பல்வேறு அனிமேஷன் படங்களுக்குப் பிறகு இறுதியாக இப்படம் மனிதர்கள் நடிப்பில் உருவாகி உள்ளது. இப்படம் பார்பிக்களின் உலகுக்கும் உண்மையான உலகுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை பிரதிபலிக்கிறது.

https://twitter.com/TansuYegen/status/1683726881613389824?s=20

இந்நிலையில், ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வசூலை வாரி குவித்து வரும் இப்படம் குறித்து சுவாரஸ்ய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் புர்ஜ் கலிபா அருகே ராட்சத பார்பி பொம்மை ஒன்று நடந்து வருவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதை ரசிகர்கள் ரியாக்ட் செய்தும், கமெண்ட் செய்தும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.