தமிழ், தெலுங்கு, இந்தி என 300-க்கும் மேற்பட்ட படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய பிரபல எடிட்டர் ஆர்.விட்டல் இன்று காலமானார் .
90 வயதாகும் இவர், ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு படத்தொகுப்பு செய்துள்ளார். படத்தொகுப்பு செய்ததுடன், முடி சூடா, மன்னன் வீட்டுக்கு வந்த மருமகள் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
சென்னையை சேர்ந்த இவர், வயது மூப்பு காரணமாக, உடல்நலமின்றி இருந்த நிலையில் இன்று திடீர் என ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரது மறைவிற்கு தமிழ் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.






