ஜூஸுக்கு பணம் கேட்ட கடை உரிமையாளரை கொலை செய்த 3 பேரை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
டெல்லி அர்தலா பகுதியை சேர்ந்தவர் கௌரவ் காஷ்யப் ( வயது 27). இவர் ரிவர் ஹின்டன் மெட்ரோ பகுதியில் ஜூஸ் கடை நடத்தி வந்துள்ளார். கடந்த 26ஆம் தேதி மாலை இவரது கடைக்கு வந்த 3 பேர் எலுமிச்சை ஜூஸ் ஆர்டர் செய்து குடித்தனர். குடித்த பிறகு அவர்களிடம் கௌரவ் காஷ்யப் ஜூஸுக்கான தொகை ரூ.90 – ஐ கேட்டுள்ளார்.
ஆனால், பணம் தர மறுத்த 3 பேரும் கெளரவை தாக்கி விட்டு தப்பி சென்றனர். விடாத கெளரவ் அவர்களை துரத்திச் சென்று பிடித்தார். ஆனாலும், அவரை தாக்கிவிட்டு தப்பிவிட்டனர். அவரை மீட்டு டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். பின் அங்கு சிகிச்சை அளிக்க முடியாமல் ராஜ் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சந்தேக நபர்களில் ஒருவர் பெயர் ராபி என்றும், மற்ற இரண்டு பேரின் பெயர்கள் தெரியவில்லை எனவும் கெளரவின் மாமா மனோஜ் காவல் துறையினரிடம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு, 3 பேரையும் பிடிக்க பல குழுக்கள் அமைத்துள்ளோம் என்று காவல்துறை கண்காணிப்பாளர் நிபுணர் அகர்வால் கூறினார்.
மூன்று பேரின் வீட்டு முகவரியை கண்டுபிடிக்க முயற்சிப்பதாகவும் அவர்கள் டெல்லி மீரட் சாலையை சிஹானி பகுதியை சேர்ந்தவர் என்பது மின்னணு கண்காணிப்பு மூலம் கண்காணிக்க பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.







