நடிகர் விஜயகாந்த்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
தமிழ் திரையுலகிலும் சரி, தமிழ்நாடு அரசியலிலும் சரி தவிர்க்க முடியாத பெயராக உருவெடுத்தவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். ஆனால், அவருடைய திரையுலக வெற்றியைப் போல் அரசியல் வெற்றியை நீண்டகாலம் நீடிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து அரசியலில் இயங்கி வருகிறார்.
ஆகஸ்ட் 25, தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் பிறந்தநாள். இன்று அவர், தனது 69ஆம் பிறந்த நாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சித் தொண்டர்கள் எனப் பலரும் பிறந்த நாள் வாழ்த்தைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “என் இனிய நண்பரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் அவர்களுக்கு எழுபதாவது வயது இன்று. அவருக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உடல் நலம் பெற்று – துடிப்பான மனிதராக அவர் வலம் வர வேண்டும் என்பதே எனது ஆசை. நலம் பெற்று நீடூழி வாழ வாழ்த்துகிறேன்!” எனத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/mkstalin/status/1562638242293264385?s=21&t=dzbhv6f78dAoW8tFvE1Adw
இதேபோல, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், “எளியோரை அரவணைக்கும் வள்ளல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவருமான அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்குத் தமிழ்நாடு பாஜக சார்பாக இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/annamalai_k/status/1562639771075489793?t=SqUdtGXoeGXGPsYDlPhtXg&s=09
கனிமொழி எம்.பி வெளியிடுள்ள பதிவில், “தே.மு.தி.க நிறுவனர் விஜயகாந்த் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். அவர் முழு உடல் நலத்தோடு மக்கள் சேவையை இன்னும் பல ஆண்டுகள் தொடர வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/kanimozhidmk/status/1562639790763151360?s=21&t=dzbhv6f78dAoW8tFvE1Adw
தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர ராஜன் வெளியிட்டுள்ள பதிவில், “‘வானத்தைப் போல’ பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், “மரியாதை”யையும் பெற்று “புலன் விசாரணை” செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் “சகாப்தமாக” “கேப்டனாக” “மரியாதை”யுடன் “நெறஞ்ச மனசு”டன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
https://twitter.com/DrTamilisaiGuv/status/1562641346141114368








