மாமியாரையும் மனைவியையும் கொன்ற கணவர்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கடலூர் அருகே மாமியாரையும் மனைவியையும் படுகொலை செய்த கணவர் நம்பிராஜை சிசிடிவி காட்சிகளுடன் காவல் துறையினர் தேடி வருகிறார்கள். கடலூர் முதுநகர் சலங்கைகார தெருவைச் சேர்ந்த பூங்கொடி மற்றும் அவரது மகள் மீனா இருவரும்…

கடலூர் அருகே மாமியாரையும் மனைவியையும் படுகொலை செய்த கணவர் நம்பிராஜை சிசிடிவி காட்சிகளுடன் காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

கடலூர் முதுநகர் சலங்கைகார தெருவைச் சேர்ந்த பூங்கொடி மற்றும் அவரது மகள் மீனா இருவரும் சாலையில் குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது மீனாவின் கணவர் நம்பிராஜ் இருவரையும் கத்தியால் வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியோடினார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தாய், மகளின் சடலங்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மீனாவும் அவரது கணவர் நம்பிராஜும் கடந்த ஒரு வருட காலமாக பிரிந்து வாழ்ந்து வந்ததும், இதன் காரணமாக ஏற்பட்ட ஆத்திரத்தில் மீனாவையும் அவரது தாய் பூங்கொடியையும் நம்பிராஜ் கொலை செய்ததும் தெரிய வந்தது. வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தப்பியோடிய நம்பிராஜனை தேடி வருகின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.