இபிஎஸ்-க்கு அதிகரிக்கும் பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு!

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பொதுக்குழு உறுப்பினர்களின் எண்ணிக்கை 2,442ஆக உயர்ந்துள்ளது. அதிமுகவின் பொதுக்குழு செயற்குழுக் கூட்டம் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற…

எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ள பொதுக்குழு உறுப்பினர்களின்
எண்ணிக்கை 2,442ஆக உயர்ந்துள்ளது.

அதிமுகவின் பொதுக்குழு செயற்குழுக் கூட்டம் ஜூலை 11ஆம் தேதி சென்னை வானகரத்தில் அவைத் தலைவர் தமிழ் மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது. இந்த பொதுக்குழு, செயற்குழுக் கூட்டத்தில் அதிமுகவின் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்வு செய்யப்பட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ஓபிஎஸ், இபிஎஸ் என இருவரும் தங்களது ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். பொதுக்குழுக் கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், அதிமுகவில் உள்ள 2,665 பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில்
2,432 பேர் கடந்த மாதம் நடைபெற்று முடிந்த பொதுக் குழுவில் இபிஎஸ்க்கு
ஆதரவாகவும், தீர்மானங்களை நிராகரிப்பதாகவும் கையெழுத்திட்டிருந்தனர். இதனை
தொடர்ந்து கடந்த வாரம் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் இபிஎஸ்க்கு ஆதரவு
தெரிவித்தனர். இதன் மூலம் 2,441ஆக ஆதரவு எண்ணிக்கை அதிகரித்தது. பின்னர்,
தொடர்ந்து இபிஎஸ் தனது ஆதரவாளர்களோடு ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில், இன்று காலை முதல் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இபிஎஸ் உடன்
ஆலோசனையில் ஈடுபட்டு வருகினர். அப்பொழுது, ஓபிஎஸ்இன் சொந்த மாவட்டமான தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியின், பழனிசெட்டிபட்டி பேரூர் கழகத்தை் சார்ந்த பொதுக்குழு உறுப்பினர் தீபன் சக்கரவர்த்தி இபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இதனால், இபிஎஸ் ஆதரவு உறுப்பினர்கள் எண்ணிக்கை 2,442ஆக உயர்ந்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை குறைந்தது.

-ம.பவித்ரா

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.